“காங்கிரஸ் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனிலேயே முடங்காமல், மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும்” என ராகுல் காந்தி அறிவுறுத்தியதாக காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள நிலையில், புதிய உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என ராகுல் காந்தி கூறியதாகவும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, தொடர்ந்து நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாரை சந்தித்தார்.