முன்னாள் துணை பிரதமர் அத்வானியின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், உயர்ந்த தொலைநோக்கு, அறிவுத்திறனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதியான அத்வானி ஜியின் வாழ்க்கை இந்தியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டது. அவர் எப்போதும் தன்னலமற்ற கடமை உணர்வையும் உறுதியான கொள்கைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.