டெல்லியில் நடைபெற்ற 'AI தாக்க உச்சிமாநாட்டில்', இந்திய கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் போட்டோஷாப், அக்ரோபேட், ஃபயர்பிளை AI மற்றும் பிரீமியர் உள்ளிட்ட முன்னணி கிரியேடிவ் செயலிகளை இலவசமாக வழங்கப்போவதாக அடோப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம், மாணவர்கள் நவீன தொழில்நுட்ப மென்பொருள்களை கட்டணமின்றி பயன்படுத்தி தங்களது படைப்பாற்றல் மற்றும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.