திமுக கூட்டணியில் அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ், தவெக உடன் கூட்டணி வைக்க இருப்பதாக முன்னதாக செய்திகள் வந்தன. இந்நிலையில், தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க, ராகுல் காந்தி விரும்பியதாக ஆதவ் ஆர்ஜுனா முக்கிய தகவலை கூறியுள்ளார். ஆனால், ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் டெல்லி சென்று இந்த கூட்டணி அமையவிடாமல் தடுத்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், “காங்கிரஸ் உடன் கூட்டணி அமையாவிட்டாலும், அந்த ஓட்டுகள் தவெகவுக்கு கிடைத்துவிடும்” என கூறியுள்ளார்.