தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 31-ம் தேதிக்குள் FL-3 பார் உரிமங்களை புதுப்பிக்க தவறினவர்களுக்கு, வரும் 31-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, உரிய உரிம கட்டணத்துடன் 50 சதவீத அபராத தொகையை செலுத்தி, வரும் 31-ம் தேதிக்குள் உரிமத்தை புதுப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசிதழில் வெளியிட்டுள்ளது.