தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ.5000 ஊதியம் உயர்வு

தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ.5000 ஊதியம் உயர்த்தி வழங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்ட அறிக்கையில், “அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ.5000 ஊதியம் உயர்வு ஊதிய உயர்வு வழங்கப்படும். இது வருகிற மார்ச் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் 9646 கௌரவ விரிவுரையாளர்கள் பயனடைவர்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி