Instagram, Facebook மற்றும் WhatsApp ஆகிய சேவைகளுடன் மேம்பட்ட AI அம்சங்களை இணைத்து ‘Meta One’ என்ற புதிய சந்தா சேவையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சேவையின் தொடக்க விலை தனிநபர் பயனர்களுக்கு மாதம் 7.99 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் Instagram மற்றும் Meta AI அம்சங்களை கூடுதல் பிரத்யேகப் பலன்களுடன் பயன்படுத்த முடியும் என மெட்டா தெரிவித்துள்ளது.