கேஸ் சிலிண்டர் புக் செய்தும், 9 நாட்கள் தாமதமாக டெலிவரி செய்ததோடு, பில் தொகையை விட ரூ.50 கூடுதலாக வசூலித்த தனியார் கேஸ் ஏஜென்சிக்கு, திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் ஆணையம் ரூ.30,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும், மன உளைச்சலுக்கு ரூ.20,000, வழக்கு செலவுக்கு ரூ.10,000 வழங்கவும், பில் தொகைக்கு மேல் வசூலிக்கக் கூடாது எனவும் ஆணையம் கண்டித்தது. பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் அனைத்து டீலர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.