மும்பை-திருநெல்வேலி எக்ஸ்பிரஸில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

மும்பை எல்.டி.டி.-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 22629, 22630) கோடை விடுமுறையையொட்டி கூட்ட நெரிசலைக் குறைக்க ஏப்ரல் 15 மற்றும் 16 தேதிகளிலிருந்து கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதனால், இந்த ரயில் 22 பெட்டிகளுடன் இயக்கப்படும். இதில் பொதுப் பெட்டிகள் மற்றும் தூங்கும் வசதி பெட்டிகள் அடங்கும். 2 அடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் 2, மூன்று அடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் 6, எகனாமி பெட்டி 1, பொதுப்பெட்டிகள் 4 ஆகியவை இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி