மலையாள திரையுலகில் பெண்களுக்கு சமத்துவமின்மை மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டித்து நடிகைகள் ரேவதி மற்றும் பத்மபிரியா தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல், கண்ணியம், சம உரிமை மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை கோரி வந்த போதிலும், புறக்கணிப்பும் அமைதியும் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது அவசர முடிவு அல்ல, சுயமரியாதையை காக்க எடுக்கப்பட்ட முடிவு என்று தெரிவித்துள்ளனர்.