சென்னை செனடாப் சாலையில் உள்ள தனது வீட்டை பாதிக்கும் வகையில் பக்கத்து வீட்டில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுவதாக நடிகை த்ரிஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொதுவான மதில் சுவரை இடிக்க இடைக்கால தடை விதித்தது. வழக்கு மீண்டும் இன்று (செப். 24) விசாரணைக்கு வந்தபோது இருதரப்பிலும் சமரசமாக பேசி பிரச்னை தீர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.