பிரபல நடிகை ஸ்ரேயா சரண் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (பிப்.19) சாமி தரிசனம் செய்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தி வரும் அவர், சாமி தரிசனம் முடிந்ததும் கோவில் அர்ச்சகர்களிடமிருந்து பிரசாதங்களை பெற்றுக்கொண்டார். கோவிலுக்கு வந்த ஸ்ரேயாவை கண்ட ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.