நடிகை சாரா அர்ஜுன் தனது மகள் போன்றவர் என இயக்குநர் ஏ.எல்.விஜய் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் விடுமுறையின் போது சாரா தனது வீட்டிற்கு வருவதைத் தற்போதும் வழக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 'தெய்வத்திருமகள்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா, தற்போது பெரிய ஸ்டாராக வளர்ந்திருப்பது தமக்குப் பெருமையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.