நுரையீரல் பிரச்னையால் சீரியல் நடிகை ரஷ்மி லீலா (37) காலமானார். அவர் குணமடைவார் என்ற நம்பிக்கையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது கணவர் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் உடல்நிலை திடீரென மோசமடைந்து உயிரிழந்தது குடும்பத்தினரும் ரசிகர்களும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.