நடிகை வன்கொடுமை - நடிகர் திலீப் வழக்கில் 8ஆம் தேதி தீர்ப்பு

கடந்த 2017ஆம் ஆண்டு நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், வரும் டிசம்பர் 8ஆம் தேதி எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. மலையாள நடிகர் திலீப் உள்ளிட்ட 9 பேருக்கு எதிரான இந்த வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் திலீப் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய திலீப்பின் மனுவை ஏப்ரல் மாதம் கேரள உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி