விழுப்புரம் காவல் நிலையத்தில் தனது மகளின் கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது நடிகை பிரேம பிரியா புகார் அளித்துள்ளார். அண்மையில் தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை மகளுடன் பேசவோ அல்லது பார்க்கவோ விடாமல் தடுப்பதாகவும் அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். "என் பொண்ணை ஏமாற்றி திருமணம் செய்து என்னிடம் இருந்து பிரிச்சிட்டாங்க. அவகிட்ட பேசாம நான் எப்படி இருப்பேன்" என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார். வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட பலரது படங்களில் பிரேம பிரியா நடித்துள்ளார்.
நன்றி: News tamil