உதயநிதியை மறைமுகமாக சாடிய நடிகை நிவேதா பெத்துராஜ்?

முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டார். இது குறித்து எக்ஸ் தளத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ், 'புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்' என்ற திருக்குறளை பதிவிட்டுள்ளார். இதன் பொருள், 'முன்னிலையில் நட்பாகப் பேசிவிட்டு, அவர் இல்லாதபோது பழித்துப் பேசிப் பொய்மையாக உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாமல் இறந்துவிடுவது நல்லது' என்பதாகும். உதயநிதியுடன் நட்பாக இருந்து வந்த நிவேதா அண்மைக் காலமாக எதிராக திரும்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕