தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் சிறப்பு பாடல்களுக்கு நடனமாடி புகழ்பெற்றவர் நடிகை முமைத் கான். இவர் ஒரு விபத்தில் சிக்கி 15 நாட்கள் கோமாவில் இருந்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து மனம் திறந்து பேசிய அவர், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் மூளையில் உள்ள 5 நரம்புகள் பாதிக்கப்பட்டதால், குறைந்தது 7 ஆண்டுகள் எந்த வேலையும் செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறினார்.