உடலை சுத்தம் செய்யும் மருந்து என நினைத்து தவளை விஷத்தை குடித்த மெக்சிகோ நாட்டு நடிகை மார்செலா அல்காசர் என்பவர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறை வழிபாட்டில் அதிக நம்பிக்கை கொண்ட இவர், மத விழா ஒன்றில் நடந்த ஹீலிங் எனப்படும் வினோத சடங்கில் இந்த விபரீத முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் குடித்தது ராட்சத இலை தவளை எனப்படும் அமேசான் காடுகளில் இருக்கும் தவளையின் விஷம் என்பது தெரியவந்துள்ளது.