மும்பையை சேர்ந்த பிரபல சீரியல் நடிகை ஷில்பா ஷிண்டே, கடந்த 2016ல் தயாரிப்பாளர் சஞ்சய் கோலி மீது பாலியல் பலாத்கார புகார் அளித்ததும், சம்பள பாக்கி கோரியதும் முற்றிலும் பொய்யானது என ஒப்புக்கொண்டுள்ளார். பணத்திற்காக இவ்வாறு செய்ய வேண்டியிருந்தது என்றும், வேறு வழி தெரியாததாலேயே புகார் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வாக்குமூலம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பழைய மனக்கசப்புகளை மறந்து அதே தயாரிப்பு குழுவுடன் சுமூகமாக பணியாற்றி வருகிறார்.