இன்று நடைபெறும் மக்களவை தேர்தலில் திரை பிரபலங்கள் தவறாமல் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் காலை முதல் ஆளாக வாக்களிக்க வந்த நடிகர் அஜித் வெள்ளை சட்டை அணிந்து வந்துள்ளார். அவரை தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகயேன் ஆகிய நடிகர்கள் வெள்ளை சட்டை அணிந்து வந்து தங்களது வாக்கை செலுத்தியுள்ளனர். கலர் சட்டை அணிந்து வந்தால் இவர்கள் இந்த கட்சிக்கு ஆதரவு என்று கூறுகிறார்கள் என்பதால் இந்த வெள்ளை சட்டை முடிவோ என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.