போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2 பேருக்கும் ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு போதைப்பொருள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.