மராத்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் யோகேஷ் மகாஜன் (44). இவர் நடித்து வரும் ஒரு தொடரின் படப்பிடிப்புக்கு நேற்று முன்தினம் (ஜன. 19) வரவில்லை. இதையடுத்து குழுவினர் யோகேஷ் வீட்டிற்கு வந்து பார்த்த போது அவர் சுயநினைவின்றி தரையில் விழுந்து கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது யோகேஷ் மாரடைப்பால் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.