நடிகர் விஜயின் 'தெறி' பட ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். ஜன.15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக ரிலீஸாகும் படங்களின் தயாரிப்பாளர்கள் கோரிக்கை அடிப்படையில் ஒத்திவைப்பு என விளக்கம் அளித்துள்ளார். தணிக்கை பிரச்னையால் 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாத நிலையில், 'தெறி' ரீரிலீஸ் ஆகும் என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.