மலேசியாவில் 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு நடிகர் விஜய் சென்னை திரும்பினார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பும் போது விஜயின் கார் பின்னால் வந்த மற்றொரு கார் இடித்ததில் அதன் இன்டிகேட்டர் லைட் உடைந்தது. இதில் விஜய்க்கு எந்த ஆபத்தும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி விஜய் தடுமாறி கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி: நியூஸ் தமிழ்