நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை கார் விபத்தில் பலி

'குட் பேட் அக்லி' பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை கார் விபத்தில் மரணமடைந்தார். இந்த விபத்தில் ஷைனும் அவரது தாயாரும் காயமடைந்தனர். இன்று காலை தமிழ்நாட்டின் தர்மபுரி பாலக்கோடு அருகே வாகனம் விபத்துக்குள்ளானது. குடும்பத்தினர் பயணித்த கார் லாரி மீது மோதியது. கேரளாவின் கொச்சியில் இருந்து பெங்களூருவுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஷைன் டாம் தமிழில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், பீஸ்ட் படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி