திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜன.19) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இந்த நிகழ்வின்போது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர். திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார்.

தொடர்புடைய செய்தி