'கில்லர்' திரைப்பட படப்பிடிப்பில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா படுகாயமடைந்துள்ளார். சென்னை பாலவாக்கத்தில் 3ஆம் கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இரும்பு கம்பியில் மோதி, எஸ்.ஜே.சூர்யா கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. 'வாலி', 'குஷி' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, கடைசியாக 2015ஆம் ஆண்டு 'இசை' படத்தை இயக்கி நடித்திருந்தார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து 'கில்லர்' படத்தை இயக்கி நடிக்கிறார்.
நன்றி: News18