நடிகர் ரவி தேஜா, இயக்குநர் கிஷோர் திருமலா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 'RT76' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். சுதாகர் செருகுரி தயாரிக்கும் இப்படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (நவ.10) மாலை 3.33 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.