தீபாவளி பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை போயஸ்கார்டன் இல்லத்தின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், அவரது குடும்பத்தினர் சார்பில் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். காலையிலேயே ரஜினியை பார்த்து ஆசி பெற அவரது ரசிகர்கள் அதிகளவில் திரண்டனர். அவர்களும் பட்டாசு வெடித்து தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், இதுவரை ரூ.825 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
நன்றி: News18