ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதற்காகவும், அவற்றில் முதலீடு செய்ய மக்களைத் தூண்டியதற்காகவும் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பிரகாஷ் ராஜ் நேற்று முன்தினம் (நவ., 12) ஹைதராபாத்தில் உள்ள சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி, '2016ஆம் ஆண்டு ஒரு செயலிக்காக பிரமோஷன் செய்தேன். அந்த செயலி சூதாட்ட செயலியாக மாறியது. எனது ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டேன். இதற்காக மன்னிப்பு கேட்கிறேன்' என்று கூறினார்.
நன்றி: News Tamil