உடல்நிலை சரியில்லாத தனது மனைவிக்கு உதவுமாறு முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துகாளை கோரிக்கை விடுத்துள்ளார். தலையில் ஏற்பட்ட திடீர் ரத்தக்கசிவு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்க முதலமைச்சர் விஜய் உதவி செய்திட வேண்டும் என்றும் வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் முத்துகாளை விஜய்யின் 'யூத்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.