பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் ஹரிஷ் கல்யாண்

பிரபல தமிழ் நடிகர் ஹரிஷ் கல்யாண்-நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியை தனது சமூக வலைதள பக்கத்தில் ஹரிஷ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். "தாயும் சேயும் நலமாக உள்ளனர், எங்கள் வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது" என குறிப்பிட்டுள்ள அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளதையடுத்து, இணையதளங்களில் இந்த செய்தி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி