தெலுங்கு சினிமாவில் காமெடி, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிஷ் வெங்கட். ‘சிறுத்தை' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார். 2 சிறுநீரகமும் செயலிழந்துள்ள நிலையில், ஹைதராபாத் ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.