நடிகர் தர்மேந்திரா உயிரிழப்பு வதந்தி: மகள் விளக்கம்

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) உயிரிழந்ததாக தேசிய ஊடகங்களில் இன்று (நவ.11) காலை செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இச்செய்தியை அவரது மகள் ஈஷா தியோல் மறுத்துள்ளார். தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தன் தந்தை குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி