பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று (நவ.24) காலமானார். அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி தனது 'X' தளத்தில், "தர்மேந்திராவின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "மாற்று வேடங்களில் அவர் நடித்த விதமும், அவரது எளிமையும் எண்ணற்ற மக்களை கவர்ந்தது; இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
நன்றி:News18Tamil