நற்பணி மன்ற மகளிரணியை சந்திக்கும் நடிகர் தனுஷ்

சென்னையில் நாளை (அக்.25) நடைபெற உள்ள தனுஷ் நற்பணி மன்ற மகளிரணியினர் மாநாட்டில் நடிகர் தனுஷ் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் தனுஷ் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த 5,000 பெண்கள் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து பெண்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் பங்கேற்க உள்ளதால், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரசிகைகள் மத்தியில் இந்த நிகழ்ச்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕