கொங்கு மண்டலத்தை சேர்ந்த சுமார் 3000 ரசிகர்களை நேரில் சந்தித்து நடிகர் தனுஷ் இன்று (பிப்.19) கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது ரசிகர்களுக்கு அறுசுவை பிரியாணி விருந்து வழங்கப்பட்டதுடன், பெண்களுக்கு புடவைகளும் குழந்தைகளுக்கு பள்ளி பைகளும் தனுஷ் தரப்பிலிருந்து பரிசாக வழங்கப்பட்டன. தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் நடத்திய இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நன்றி:பாலிமர்