நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினிமணி (84) வயது மூப்பு காரணமாகச் சென்னையில் காலமானார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித் இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள நிலையில், திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2023-ஆம் ஆண்டு அஜித்தின் தந்தை சுப்ரமணியம் மணி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி: பாலிமர்