நடிகர் அஜித் தற்போது போர்ச்சுகலில் நடக்கும் ரேஸ் போட்டியில் பங்கேற்று வருகிறார். பயிற்சியின்போது சிறு விபத்து ஏற்பட்டது, எங்களது குழு விரைந்து செயல்பட்டதால் எந்த பாதிப்பும் இன்றி பயிற்சியை தொடர்கிறேன் என தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் அஜித் கூறியுள்ளார். மோட்டார் ஸ்போர்ட்ஸில் எனது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி தருகிறது. அடுத்தடுத்து நான் பங்கேற்க இருக்கும் போட்டிகளை, ரசிகர்கள் தேடி தெரிந்து கொள்ள நினைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.