வேலூர் மாவட்டத்தில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கட்டைவிரலை வெட்டிய செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில், பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கையில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்டரை கத்திரிக்கும்போது, தவறுதலாக விரல் துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், செவிலியர் அருணா தேவி, நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இல்லாத பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.