தென்கொரியா: பிரபல BTS பாடகர் ஜின்-ஐ பொதுஇடத்தில் வைத்து முத்தமிட்ட ஜப்பானைச் சேர்ந்த 50 வயது ரசிகைக்கு தென்கொரிய போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த ஆண்டு, ராணுவ சேவையை முடித்துவிட்டு ஊர் திரும்பிய ஜின், தனது ரசிகர்களை சந்திப்பதற்காக ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர். அப்போது, ரசிகை ஒருவர், ஜின்னிற்கு முத்தமிட்டு உள்ளார். இதனால் அப்செட்டான மற்றொரு ரசிகை, கிரிமினல் புகார் கொடுத்ததை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.