சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், 'ஆக்சன் கிங்' அர்ஜுன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள 'பிளாஸ்ட்' திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், ரவி பசூர் இசையில், அப்பா-மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 28-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.