புதிய ஆட்சி அமையவுள்ள நிலையில் பொறுப்பு ஆளுநர் சென்னை வருகை

தமிழகத்தில் புதிய அரசு அமையவுள்ள சூழலில், பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் கேரளா மாநிலத்திலிருந்து இன்று சென்னை வந்தடைந்தார். முன்னதாக, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். ஆளுநரின் வருகையைத் தொடர்ந்து, அவர் விஜய்யைச் சந்தித்து ஆட்சி அமைக்க முறையாக அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது.

தொடர்புடைய செய்தி