ஆந்திரா: அன்னமையா மாவட்டம் பியாரம் கிராமத்தில் காதலர் தினத்தன்று ஒரு கொடூரம் நடந்துள்ளது. கணேஷ் என்ற இளைஞர், இளம்பெண்ணின் தலையில் கத்தியால் குத்தி, முகத்தில் ஆசிட் ஊற்றியுள்ளார். அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த இளம்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அந்த இளைஞர் மதனப்பள்ளியை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர். வரும் ஏப்ரல் 29ஆம் தேதி இளம்பெண்ணுக்கு திருமணம் நடைபெறவிருந்த சூழலில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.