அண்ணா தலைமையிலான திமுகவின் முதல் ஆட்சிக் காலத்தில் பல முக்கிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ எனப் பெயர் மாற்றப்பட்டது. அரசின் இலச்சினையில் ‘கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்பதற்குப் பதிலாக ‘தமிழ்நாடு அரசு’ என்றும், ‘சத்யமேவ ஜயதே’ என்பதற்குப் பதிலாக ‘வாய்மையே வெல்லும்’ என்றும் மாற்றப்பட்டது. இந்தித் திணிப்பைத் தடுக்க இருமொழிக் கொள்கை சட்டம் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் அரசியல்மயமாக்கலுக்காக மகளிர் மன்றம் தொடங்கப்பட்டது.