டிரம்ப் உடல் எடை அதிகரிப்பு: உடற்பயிற்சி செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தல்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் 22 சிறப்பு மருத்துவர்கள் மூலம் விரிவான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர் நல்ல உடல்நலத்துடன், முப்படை தளபதியாக பணியாற்ற முழு தகுதியுடன் இருப்பதாக அவரது மருத்துவர் சீன் பார்ப்பெல்லா தெரிவித்துள்ளார். எனினும், கடந்த ஆண்டை விட தற்போது 6 கிலோ அதிகரித்து 104 கிலோ எடையுடன் இருப்பதால், டிரம்ப் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி