செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். பையனூரில் மாமல்லபுரம் சாலையில் மாடு குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நன்றி: புதிய தலைமுறை