தென்காசி மாவட்டம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர். வெடிச்சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த இரு குழந்தைகளும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: நியூஸ்18