தெலுங்கானா மாவட்டம் ஷம்ஷாபாத் அருகே நடிகர் ராம் சரண் நடித்துவரும் ‘தி இந்தியா ஹவுஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நீர்தொட்டி வெடித்து விபத்துக்குள்ளாகியது. அதில் படக்கருவிகள் மற்றும் செட் பொருட்கள் சேதமடைந்துள்ளன. மேலும், ஒளிப்பதிவாளர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.